#BREAKING: சசிகலாவுக்கு எதிராக ஈபிஎஸ் , சி.வி சண்முகம் கூட்டத்தில் தீர்மானம்..!

Default Image

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கடந்த சில நாட்களாக சசிகலாவை அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்களும் தொடர்ந்து தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி வருகிறது. சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வருவதால் அதிமுகவில் குழப்பமும் ஏற்படும் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது,  கட்சி உறுப்பினராக இல்லாத வரும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கு கூட தகுதி இல்லாதவர் அதிமுக பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என கண்டனம் தெரிவித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும்  சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்