கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதில், முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலங்கள் என பல்வேறு இடங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதன்பின் சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி, அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையும் நடத்தியிருந்தனர். இந்த சூழலில் சமீபத்தில் கரூரில் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது.
இந்த நிலையில், கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கரூர் ராம்நகரில் கட்டுமான பணி நடைபெற்று வரும் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், தற்போது கரூரில் அவரது சகோதரர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…