#Breaking:வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு!

Default Image

தஞ்சை:வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கியிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு வந்து,அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, ரூ.500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கம் அவரின் வங்கி லாக்கரில் இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து,சாமியப்பனின் வங்கி லாக்கரில் இருந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை அவரது மகன் அருண் பாஸ்கர்,சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் எடுத்து கொடுத்துள்ளார்.அதன்படி,வங்கி லாக்கரில் இருந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,2016 ஆம் ஆண்டு திருக்குவளை கோயிலில் காணாமல் போன மரகத சிலைதான் இது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இதனையடுத்து,சாமியப்பனுக்கு மரகத லிங்கம் எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்