#BREAKING: 5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு..!
மின்னணு உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 16% ஆகும். மேலும் கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருள்கள் உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் புதிய தொழில்கொள்கையின் அடிப்படையில் மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு தொகையில் 30% வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையில் உற்பத்தி 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்த்துதல். இந்தியாவில் மொத்தம் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பினை 25% உயர்த்துதல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிதி நிறுவங்களில் இருந்து பெறப்படும் காலக்கடனுக்கு 5% வரை வட்டி மானியம். மின்னணு பழுது பார்க்கும் பூங்காங்க்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கள் வசதிகள் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
முதல் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 6 மாத காலங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வீதம் பயிற்சிமானியம், பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம் என அரசு தெரிவித்துள்ளது.