சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 5 மருத்துவமனைகளில் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே, சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் இரு மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் மற்றும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டது அம்பலமானதை தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த பின், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கோவை சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே, 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…