#BREAKING: அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் – நீதிமன்றம்
கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து.
மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் திறமை அடிப்படையில் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது என நீதிபதி மகாதேவன் கருத்து கூறியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் சூழ்நிலை நிலவுகிறது. கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ காரில் பயணிப்பது தற்போதைய சூழலாக உள்ளது எனவும் விமர்சித்தார்.
உசிலம்பட்டி மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை, கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து தமிழக உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.