தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வழக்கமான வகுப்புகளுக்கு வருகை தர வேண்டியதில்லை என அறிவிப்பு.
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று சட்டபேரவை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத மட்டுமே பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்றும் தேர்வு இல்லாத நாட்களில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடும் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…