வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய காரணங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிலர் விண்ணப்பித்தும் சில காரணங்களால் அது நிராகரிப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே இன்று முதலமைச்சர் பழனிசாமி விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டபட்டது.அந்த அறிக்கையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், E-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க இன்று (14.8.2020) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
எனினும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வெளி தற்போதுள்ள E-Pass நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…