யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை.
யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை. முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற இரண்டாவது நாளே மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த விதிகளை மீறினால் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்படின் சேனலை முடக்கவும் செய்யலாம் என்றும் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் வீடியோக்களை நீக்காத பட்சத்தில் அவர்களும் குற்றவாளிகளே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அவதூறு கருத்துக்களை பதிவிட்டால் அதனை சமூக வலைத்தளங்களே நீக்க வேண்டும் அல்லது அதனை நீக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறிய நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க தவறும் சமூக வலைத்தளங்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், வீடியோவை நீக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஜாமீன் கேட்டபோது இனி அவதூறு கருத்து பதிவிடமாட்டேன் என பிராமணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார் சாட்டை துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…