#Breaking: நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவியேற்பு!
முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் சற்றுமுன் பதவியேற்றார். அப்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று கூறி தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள துரைமுருகன், திமுக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்று உள்ளார். அவருக்கு சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற துரைமுருகனை அவர்களை தொடர்ந்து, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் மற்ற திமுக அமைச்சர்களும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் பதவி ஏற்று வருகின்றனர்.