ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அறிவிப்பு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்பமிட்டு கொடுத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்படும். கட்சி சட்ட திட்டங்களை இயற்றவும் திருத்தும் செய்யவும் அதிகாரம் கொண்டது அதிமுக பொதுக்குழு. அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விதிகள் ஏதும் இல்லை.
அனைத்து கட்சி தேர்தல் முடிவுகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டது தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், அதிமுகவில் அனைத்து பதவிகளும் 5 ஆண்டு காலம் தான். ஓபிஎஸ்-சின் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ்-சின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. ஏற்கனவே திருத்தப்பட்ட சட்டவிதிகளுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதியானது என தெரிவித்தார். அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்த பதவிகள் கலவாதியாகின. காலாவதியானதால் ஓபிஎஸ் பொருளாளர், ஈபிஎஸ் தலைமை நிலைய செயலாளராக தொடருவார் என்றும் 2017-ஆம் ஆண்டு ஓபிஎஸ்க்காக அதிமுக விதியில் திருத்தம் செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…