#BREAKING : ஆக.1-ல் ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார் டிடிவி தினகரன்..!

TTV DHINAKARAN

கோடநாடு கொலை – கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி, ஆக.1-ல் ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் போராட்டத்தில், டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். 

இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் 01.08.2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகவும் நேசித்த
டமான கோடநாட்டில், அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காலை மணியளவில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் வகையில் மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 செவ்வாய்கிழமை அன்று 10:30 மணிக்கு கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உள்ளனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்