ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது.
குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லி விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களும் காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இதனையடுத்து, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விமானப்படை சார்பில், ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள். விபத்துக்கான காரணத்தை அறிய முப்படைகளின் விசாரணை நடக்கிறது. விரைவாக விசாரணை நடத்தி உண்மைகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…