#BREAKING: மாநிலங்களவை எம்பி ஆனார் திமுகவின் எம்எம் அப்துல்லா.!
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் எம்எம் அப்துல்லாவின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் திமுகவின் எம்எம் அப்துல்லா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தல் யாரும் போட்டியிடாததால் அப்துல்லா போட்டின்றி தேர்வாகி உள்ளார் என அறிவித்துள்ளனர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் 2019ல் மறைந்ததை அடுத்து அந்த இடம் காலியானது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுகவின் எம்எம் அப்துல்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த 3 பேரின் மனு நிராகரிக்கப்பட்டதாலும், மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம்.அப்துல்லா தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
அதன்படி, தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் அப்துல்லா வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். வருகின்ற 2025 ஜூலை 24-ஆம் தேதி வரை அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.