நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 9ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 9-ஆவது கட்ட பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை, தென்காசி, கோவை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மாவட்ட வாரியாக கழகத்தின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை 8 கட்டங்களாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 9ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக 164 வார்டுகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் 17, விசிக 6, மார்க்சிஸ்ட் 5 இடங்களில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக 3, சிபிஐ 2, ஐயுஎம்எல் மற்றும் மமகவுக்கு தலா 1 என சென்னையில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக 35 வர்டுகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்களின் முழு பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. அதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…