#BREAKING: டிச.17ல் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு!
சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது. கடந்த 2007, டிசம்பர் 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், 2வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதெடர்பான அறிவிப்பில், 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி மாநாட்டில் 10 லட்சம் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தகைசால் இளையோர்
இந்திய அரசியலுக்கு ஜனநாயக விடியலை தரப்போகும் கழக @dmk_youthwing மாநாடு!!!17-12-2023 அன்று சேலத்தில்!!@Udhaystalin pic.twitter.com/LPMha8S3lU
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) August 26, 2023