இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
அண்மையில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,மாநில உரிமை,மொழி உரிமை காக்ககண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.திமுக தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும்,முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் கடிதம் வாயிலாக இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேலும்,அக்கடிதத்தில் முதல்வர் கூறியதாவது:”தமிழ் மொழி,தமிழ் மக்கள்,தமிழ்நாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திமுக செயல்படுகிறது.எனவே,தமிழகத்தை வளர்த்தெடுப்போம்,அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்.இந்திய ஒன்றியத்தில் எவராலும் சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…