குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ,குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டிசம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குக் கமலுக்கும் அழைப்பு விடப்படும் என்றும் திமுகவின் கூட்டம் குறித்து கமல்ஹாசன் என்னிடம் பேசினார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.பின்னர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் தன் கட்சி பங்கேற்கும் என்று மக்கள் நீதி மமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு நேரில் சென்று மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி.
இதற்கு இடையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அருணாச்சலம், செளரிராஜன் சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், தங்கள் முடிவு குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதனால் திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா, பங்கேற்காதா ? என்ற கேள்வி எழுந்த நிலையில் திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக கமல்ஹாசன் வெளிநாடு செல்வதால், ம.நீ.ம பங்கேற்காது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…