டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலகம், வரும் செப்.17 அல்லது 18-ஆம் தேதி திமுக அலுவலகம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மூலம், திமுக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர், சட்டீஸ்கர் முதல்வர் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதைத்தவிர இடதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் இந்த திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுக்கவுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் திமுக தலைவர்களை முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளனர்.
மேலும், இந்த விழாவில் தமிழக முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியானது, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு மாநில கட்சியாக இருந்து திமுகவும் தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பட்சத்தில், இந்நிகழ்ச்சி தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக கருதப்படும்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…