நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டம் முழக்கம்.
டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை தொடங்கி நடைபெற்று வருகிறது. அவை தலைவரான வெங்கையா நாயுடு, முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்கான நேரத்தில் யாரெல்லாம் பேசுவதற்கு பெயர் கொடுத்திருந்தார்களோ, அவர்களை பேசும்படி அவர் தலைவர் அழைப்பு விடுத்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த தமிழக உறுப்பினர்கள் நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி எடுத்துள்ள முடிவை குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதற்கு அவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதிக்காததால், மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்கமிட்டனர்.
திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, எம் சண்முகம், வில்சன், ஆர் பாரதி உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அவை தலைவர் வெங்கையா நாயுடு, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் போது நீட் விவகாரம் குறித்து பேசலாம் என ஆலோசனை தெரிவித்தார்.
ஆனால், திமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் நிராகரித்துவிட்டன, உடனடியாக இந்த அவசர விவகாரம் குறித்து பேச வேண்டும். ஆளுநர் எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு, நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது தவறு எனவும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக எம்பிக்கள் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க முடியாது என மாநிலங்களவை தலைவர் மறுத்துள்ளார்.
ஆளுநரின் அதிகாரம் தொடர்புடைய பிரச்சனை இது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் நாளை இதுபோன்று நடக்கலாம் என்றும் ஒரு மாநில சட்டமன்றம் அனுப்பக்கூடிய மசோதாவை ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும் எனவும் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். கேள்வி நேரம் தேவையில்லை என்றால் கூட பரவாயில்லை, திமுக கோரிக்கையை தற்போது விவாதிக்க முடியாது என அவை தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். விவாதம் நடத்த மாநிலங்களவை தலைவர் அனுமதி வழங்காததால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…