திமுக எம்பி ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் 48 மணிநேரத்திற்கு திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் பரப்புரையில் திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளித்ததை தொடர்ந்து, மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அதிமுக தரப்பில், திமுக எம்.பி ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் கூறியிருந்த நிலையில், நேற்று ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த நிலையில், ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…