#BREAKING : கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏ பங்கேற்க தடை
- திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஒருமையில் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.நேற்றைய ஆலோசனையில் வரும் 9ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இன்று தமிழக சட்டப்பேரவை 2-ஆம் நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.இந்த விவாதத்தின் போது,திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பேசினார்.அவர் பேசிய பின்பு அமைச்சர் வேலுமணி பேசினார்.அவர் பேசியதை அடுத்து ஜெ.அன்பழகன் அமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டுவந்ததை தொடர்ந்து ஜெ.அன்பழகன் மன்னிப்பு கோரினார் . மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால் வெளியேற்றத்தை கைவிட்டார் சபாநாயகர்.இதனையடுத்து திமுக எம்எல்ஏ அன்பழகனை கூட்டத் தொடரில் இருந்து நீக்கியுள்ளார் சபாநாயகர் தனபால்.இந்த கூட்ட தொடர் முழுவதும் ஜெ அன்பழகன் பேரவைலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.