#Breaking : தனது ஐனநாயக கடமையை ஆற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன், சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தனர். இவர் தனது ஜனநாயக கடைமையை ஆற்றுவதற்காக மக்களோடு மக்களாய் வரிசையில் காத்திருந்து, தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஆகியோரும் வாக்களித்துள்ளனர்.
இவர் வாக்களிக்க வருவதற்கு முன்னதாக, சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதையை செலுத்திவிட்டு வாக்களிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.