#Breaking:ராஜ்யசபா உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு ,ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ராஜ்யசபா உறுப்பினராக திமுகவின் கனிமொழி சோமு,ராஜேஷ் குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவின் வைத்திலிங்கம் ,கேபி முனுசாமி ஆகியோர் முன்னதாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.இதனையடுத்து,தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்காக ,திமுகவின் கனிமொழி ,ராஜேஷ்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில்,இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான,கால அவகாசம் முடிவடைந்து விட்டதால்,ராஜ்யசபா எம்பியாக திமுகவின் கனிமொழி ,ராஜேஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதற்கான ஆணையும்வழங்கப்பட்டுள்ளது.இருவரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனால்,மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.