#BREAKING : வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு -நீதிமன்றத்தை நாட திமுக முடிவு
- மாநில தேர்தல் ஆணையரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
- சந்திப்பிற்கு பின் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இன்று ஊராக உள்ளாட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை நேரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.அவரை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்கிறது. திமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.தேர்தல் ஆணையத்தில் உண்ணாவிரதம் அல்லது தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்பது பின்னர் முடிவு செய்யபப்டும். மாவட்ட அளவில் புகார் அளித்து பயன் இல்லை என்பதால் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம்.மேலும் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.