#BREAKING : வேலூர் மாவட்டத்தில் கூட்டணிக்கு இடம் ஒதுக்கியது திமுக…!
உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் கூட்டணிக்கு இடம் ஒதுக்கியது திமுக.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில், திமுக, வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில், பேர்ணாம்பட் மாவட்ட கவுன்சிலர் இடம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. மேலும், 138 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் காங்கிரஸ்-3, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள மற்ற இடங்களில் திமுக போட்டியிடுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.