#BREAKING: செப்.20ல் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

Default Image

மத்திய அரசின் செய்லபாடுகளை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போராட்டம்.

இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த 20-ஆம் தேதி இந்திய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம்,

பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக – விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்றும் ஒருங்கிணைந்து போராடுவோம், மதசார்பற்ற – ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம் என கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்