#BREAKING: தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!
சென்னையில் தேமுதிகவின் கொடிநாளையொட்டி பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரத்தை தொடங்கினார் தலைவர் விஜயகாந்த்.
தேசிய முன்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாள் விழா இன்று பிப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் அவருடைய ரசிகர் மன்றத்தை தொடங்கியபோது இந்த நாளில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2005ம் ஆண்டு தேமுதிகவாக மாற்றப்பட்ட பின்னரும் ரசிகர் மன்றத்தின் கொடிதான் என்று இருந்த நிலையில், கொடி நாள் நிகழ்வை விருங்கப்பாக்கம் இருக்கக்கூடிய அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த பிரச்சார வாகனத்தில் அருகில் இருக்கக்கூடிய முக்கிய பிரமுகர் இல்லத்தில் வாகனத்தில் இருந்தபடியே கொடி ஏற்றினார். பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்கள் கொடியை ஏற்றினர். இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த், கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு தொண்டர்களை சந்திப்பார் விஜயகாந்த் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இரண்டு குழந்தைகளுக்கு பெயர்சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. பெண் குழந்தைக்கு விஜயலதா என்று பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. தேமுதிகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தாது.