தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழ் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் இதனை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. விருப்ப மனுவை ரூ.1,000 கட்டணம் செலுத்தி திமுகவினர் விருப்ப மனு பெறலாம் என்று கூறியுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்.24 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதி விண்ணப்ப கட்டணமாக ரூ.25,000 என்றும் மகளிர் மற்றும் தனி தொகுதிகளுக்கு ரூ.15,000 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 2 முதல் 5 வரை நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…