#BREAKING: இதைச் செய்ய தவறினால் தகுதி நீக்கம் – மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை.
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் உரியவாறு பதவியில் இருந்து விலகாமல் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தால் ஏற்கனவே வகிக்கும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்றும் உரிய பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கனவே வகித்த பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அட்டவணை 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 28 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி பதவியில் உள்ளவர்கள், உரிய பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.