#BREAKING: சமையல் பணியாளர்களை பணிநீக்கம் உத்தரவு ரத்து – ஐகோர்ட் கிளை
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
திருச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையல் பணியாளர் பணிநீக்கம் ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யகோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.
அதிக கல்வி தகுதி உள்ளதாக கூறி 30 மேற்பட்ட சமையல் பணியாளரை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. பணி நியமனம் குறித்த விளம்பரத்தில் கல்வித்தகுதி பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அறிவிப்பாணையில் கல்வித்தகுதி குறித்த தகவல் இல்லை என்பதை உறுதி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.