Breaking: அனைத்து கல்விநிறுவனங்கள் மூட உத்தரவு.!
அனைத்து கல்விநிறுவனங்கள் வருகின்ற 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் பத்தாம் வகுப்பு , +2 வகுப்பு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் மார்ச் 31-ம் தேதி மூடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.