#Breaking: வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல்செய்ய உத்தரவு.!
- 13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை மதியம் 12.30க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக 10 வழக்கறிஞர்கள் முறையிட்டதால் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவுவிட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவு பிரதியை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது 13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை மதியம் 12.30க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐகோர்ட்டு கிளைக்கு உட்பட்ட 13 மாவட்ட சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக 10 வழக்கறிஞர்கள் அது தொடர்பாக முறையிட்டதால் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவுவிட்டது.
மேலும் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையாயின் அது தேர்தலின் நோக்கத்தை சிதைக்க செய்யும் என நீதிமதிகள் அறிவித்தனர்.