கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் மூடப்பட்டது .இதனை அடுத்து முழுக்க முழுக்க நீதிமன்றங்களில் விசாரணையானது காணொளி மூலமாக தான் நடைபெற்றது. அதற்குப் பின் ஒரு சில மாதங்கள் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், தொடர்ந்து டெல்டா மற்றும் ஓமைக்ரான் போன்ற வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்திருந்த அந்த நிலையில் மீண்டும் நீதிமன்றங்களில் காணொளி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி காணொளி அல்லது இரண்டு முறைகளிலும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகும் மனுதாரர்கள் கொரோனா தடுப்புபூசி செலுத்தி இருப்பது கட்டாயம்,. வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் அறைகள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்பால், நீதிமன்ற வளாகங்களில் உள்ள உணவகம், நூலகம் ஆகியவை செயல்பட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…