#BREAKING: இன்று மாலை வீடு திரும்புகிறார் துணை முதலமைச்சர்.!
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை வீடு திரும்பபுவார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 12 மணியளவில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், துணை முதல்வர் உடல்நிலை சீராக உள்ளது. எனவும் இன்று மாலை வீடு திரும்பபுவார் என மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.