#Breaking:தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்!
அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்தமானில் முன்னதாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரையை நோக்கி செல்லும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில்,தற்போது வட தமிழகம் – தெற்கு ஆந்திராவை நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எனினும்,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.