#BREAKING : 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் பகுதி உருவாகும். வணக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து நவ.11-ஆம் தேதி தமிழகம் அருகே வரும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.