#Breaking : இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி.! பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.!
ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனையடுத்து இடை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் மேற்கொண்ட நிலையில், தற்போது தேமுதிக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம், வாசன் ஆகியோரை சந்தித்து தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு கோர முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.