தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வலது தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் பிறந்தநாளை தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுகின்றனர். தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். கூடியிருந்த தொண்டர்களும் ஆரவாரத்துடன் கேப்டன், கேப்டன் என முழக்கமிட்டனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தை சந்திக்க கூடியிருந்த தொண்டர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்; நலமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…