#BREAKING : பல மாதங்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வலது தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் பிறந்தநாளை தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக  கொண்டாடுகின்றனர். தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். கூடியிருந்த தொண்டர்களும் ஆரவாரத்துடன் கேப்டன், கேப்டன் என முழக்கமிட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்  கேப்டன் விஜயகாந்தை சந்திக்க கூடியிருந்த தொண்டர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில்  பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்; நலமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்