#Breaking:பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதிப்பெயர் நீக்கம் …!

தமிழகத்தில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இதற்கிடையில்,பாடநூல் கழக தலைவராக ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி,12 ஆம் வகுப்பில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் என்பது உ.வே.சாமிநாதர் என்று மாற்றப்பட்டுள்ளது.இதேபோல,அவரது ஆசிரியர் மீனாட்சி சுந்தரனார் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது.மேலும்,வ.உ.சிதம்பரனார் பிள்ளை என்பது வ.உ.சிதம்பரம் என்றும்,தமிழில் வெளியான முதல் நாவலான ‘மாயவரம் வேதநாயகம் பிள்ளை’ என்பதின் பெயர் மாயவரம் வேதநாயகம் என மாற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,நாமக்கல் கவிஞர் என்று சொல்லக்கூடிய ராமலிங்கம் பிள்ளை என்பவரின் பெயர் ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்,தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் வரும் ரெட்டி என்பது போன்ற சாதிய பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது.
இதனால்,இனி வரும் நாட்களில் அனைத்து பாடப்புத்தகங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் வரும் சாதிய அடையாளங்கள் நீக்கப்பட்டு வரும் என்றும் தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.மேலும்,படிக்கும் வயதிலேயே மாணவர்களுக்கு சாதி ரீதியான தகவல்கள் குறித்து தெரியக் கூடாது என்பதற்காக,இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக,1997 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள்,மாவட்டங்களுக்கு இருந்த தலைவர்களின் சாதிப் பெயர்களை நீக்கியும்,அதேபோல போக்குவரத்து துறையில் இருந்த பல்லவன் என்ற சாதி பெயர்களை நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி காலத்திலும் தெருக்களுக்கு,சாலைகளுக்கு இருந்த சாதிப் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025