#BREAKING : பாலியல் புகார்களில் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் – உயர்நீதிமன்றம்

பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றசாட்டு மீது உடனடி விசாரணை தேவை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கல்பாக்கம் பாபா அணுமின்நிலையத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றசாட்டு மீது உடனடி விசாரணை தேவை என தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் குறித்த விசார்ணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் என்றும், அரசுத்துறைகள், பொதுநிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கப்பட குழு அமைக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், புகார்களை பெற்றால் மட்டும் போதாது. உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுத்துறை, பொதுநிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகமாக உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.