#BREAKING: ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக் உரிமை உண்டு- உயர்நீதிமன்றம்.!
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.
ஜெயலலிதாவிற்கு ரூ.9.13 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. தமிழகம் இல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும், கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் சொத்து உள்ளது. இதனை முறையாக நிர்வகிக்க நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது இருந்தனர்.இதில் வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகி வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து,ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா மற்றும் தீபக் உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்ற கூடாது. போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் முதல்வரின் அலுவலகமாக மாற்ற உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.