#BREAKING : தொடரும் மாணவர்களின் மரணம் -திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை..!
திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. கிராம மக்கள் சாலை மறியல்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களுடன் இருந்து உணவருந்திவிட்டு சென்னார் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் அளிக்கவில்லை என பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவியின் மரணத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கு பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.