சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் அறிவிப்பு.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக டி.ராஜா பணிபுரிந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனிடையே, சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருக்கக்கூடிய எம் துரைசாமி தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வில் இருந்து விசாரித்து வருகிறார். இந்த சமயத்தில், அவரும் நாளை மறுதினம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியாக தற்போது இருக்கக்கூடிய டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 22-ஆம் தேதி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்கிறார்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…