#BREAKING : முடிவுக்கு வருகிறது ஊரடங்கு கட்டுப்பாடுகள்..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்வதாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பரவல்
உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
அதன்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தது.
மத்திய அரசு அறிவிப்பு
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை வரும் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக கைவிடலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்வதாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
கட்டுப்பாடுகள் தளர்வு
கொரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்தை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மாஸ்க் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற நடைமுறைகள் தொடரும் என்றும், இதர கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவதாகவும், மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.