#BREAKING : தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..! மருத்துவர் குழு பரிந்துரை..!
ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.