#BREAKING : ஊரடங்கு நீட்டிப்பு…! 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி…!
ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, தொற்று குறைந்த அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி,திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி,தூத்துக்குடி, விழுப்புரம்,வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களுக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமல், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே,இதற்குமுன் அளிக்கப்பட்டுள்ள தளர்வில், சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.