#Breaking : ஊரடங்கு நீட்டிப்பு – மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி!
தமிழகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன்படி கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளதால் தற்பொழுது மேலும் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மளிகை, பலசரக்கு, காய்கறி மற்றும் இறைச்சி, மீன் விற்பனை செய்யக்கூடிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce ) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம் .
- இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.