#BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடக்கம்!
தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றியும், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதே ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் செப்.1 முதல், 9முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் முதல்வர் ஆலோசிக்கப்படுவதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும், உரிமையாளர்கள் தியேட்டர் திறக்க கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் ஊரடங்கில் புதிய தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? என்றும் பள்ளிகள் திறப்பது பற்றியும், தியேட்டர்கள் திறக்கலாம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.